இணையத்தின் வழி உங்கள் எண்ணங்களை பகிர உதவுவதே வலைப் பதிவு (வலைப்பூ என்று சொல்வோரும் உண்டு). இதற்கு மொழி ஒரு தடையல்ல. அவரவர் தாய் மொழியிலும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
வலைப்பதிவு என பரவலாகக் குறிப்பிடப்படும் வலைப்பூ பதிவில், உங்கள் எண்ணங்களை முன்வைத்து எதைப் பற்றியும் பேசலாம்.
தொழில்நுட்ப உலகில், எழுதுகோலும் காகிதமும் இணையத்தால் பதிலிடப்பட்டு விட்டன. வலைப்பதிவுகள் பெரும் புகழ் பெற்றதற்கு இதுதான் முக்கிய காரணம். பள்ளி, கல்லூரி, அலுவலக இடைவேளையின்போது பேசியவை, ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட விடயங்கள், அண்மையில் படித்த புத்தகம், அந்த நூல் பற்றிய திறனாய்வு, ஏதாவது ஒரு பொருள் அல்லது பிரச்சினை என எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஒரு வகையில் கட்டற்ற இதழியல் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஊடகங்களின் அனைத்து சாத்தியங்களும், அதற்கு மேலும் இதில் சாத்தியம்.
நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை உங்களுக்கும், உலகத்திற்கும் வலைப்பூக்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறையின் அறிவாயுதம் இது. இதை ஆன்லைன் நாட்குறிப்புகள் போல பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். தங்களுக்கான இலக்கிய வெளியாக கையாளுபவர்களும் அதிகம். உங்களுக்கான சமூகத்தை உருவாக்க அல்லது உங்களுக்கான சமூகத்தில் இணைய வலைப்பூக்கள் கைகொடுக்கின்றன என்று சொன்னால், அதன் வலிமையை உணர ஏதுவாக இருக்கும். (நீங்கள் படித்துக்கொண்டிருப்பது ஒரு வலைப்பதிவுதான். நினைத்த அடுத்த நொடியே செயலாக்கம் பெற்றுவிட்டது).
வலைவுலகிற்க்கு த்ஙகளை அன்போடு அழைக்கிறேன்...
ReplyDeletehttp://kavithaiveedhi.blogspot.com
ReplyDelete