Saturday, June 29, 2013

‘ஓப்பன் சோர்ஸ்’ ஹார்டுவேர்

 

    ஓப்பன் சோர்ஸ் என்றாலே பலருக்கும் சாஃப்ட்வேர் அதுவும் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஓப்பன் சோர்ஸ் என்பது, சாஃப்ட்வேர்களையோ இலவசத்தையோ குறிப்பது அல்ல. வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்பதே இதற்கு அடிப்படை. இதனால்தான் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் என்பதை தமிழில் திறவூற்று மென்பொருள் என அழைக்கிறோம். மென்பொருள் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது (அதாவது மூல நிரல்கள்) வெளிப்படையாக இருக்கும் என்பதோடு, அதை படியெடுக்கவும், மாற்றியமைக்கவும், லாப நோக்கின்றி விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. மைக்ரோசாஃப்ட்டின் தயாரிப்புகள் போன்ற உரிமை நிலை மென்பொருட்களைப் பொருத்தவரை இது சாத்தியமில்லை. ஆக ஒப்பன் சோர்ஸ் என்பது, கட்டமைப்பு\வடிவமைப்பு என்பதன் மீது பயனாளருக்கு வழங்கப்படும் சுதந்திரத்தைக் குறிக்கிறது. இந்த ஓப்பன் சோர்ஸ் என்ற கோட்பாடு ஹார்டுவேர் உலகில்தான் தொடங்கியது என்றால் பலரும் வியப்படையக் கூடும்.

    பிசி எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வடிவமைப்பில் ஒரு புரட்சியைத் தொடங்கி வைத்தது ஆல்டெர் 8800 மைக்ரோகம்ப்யூட்டர் கிட். 1975-ம் ஆண்டில் எம்ஐடிஎஸ் நிறுவனம் இதை விற்பனை செய்தது. இந்த கிட் முழுமையான கணினி அல்ல. மாறாக அதை வாங்கி, கட்டமைத்து கணினியாக உருவாக்க வேண்டும். அப்படி கணினியாக உருவாக்கும்போது, அதில் வடிவமைப்புச் சுதந்திரம் இருந்தது. இதற்காகவே, எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களும், ஹார்டுவேர் ஆர்வலர்களும் ஆல்டெர் கிட்டை வாங்கி, கணினியாக உருவாக்கிப் பயன்படுத்தினர். அது பற்றிய அறிவையும், வடிவமைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பெர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி இப்படித்தான் தொடங்கியது. இதில் மற்றொரு முக்கியமான செய்தி என்னவென்றால், ஹார்டுவேர் வடிவைமப்பில் திறந்த நிலை. இந்தத் தொடக்கப் புள்ளி, பின்வந்த ஆண்டுகளில் ஹார்டுவேர் உலகில் ஓரங்கட்டப்பட்டு விட்டது. ஆனால், சாஃப்ட்வேர் துறை இந்தப் போக்கை கையில் எடுத்துக் கொண்டு, பெரும் மாற்றங்களைச் சாதித்துள்ளது. லினக்ஸ் போன்றவற்றின் மாபெரும் வெற்றி, ஓப்பன் சோர்ஸ் என்பதை சாஃப்ட்வேர் உலகின் எதிர்காலமாக மாற்றியுள்ளது.

    இந்த வெற்றியின் காரணமாக, "ஒப்பன் சோர்ஸ் ஹார்டுவேர்" என்பதன் மீதும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. ஹார்டுவேர் (மெக்கானிக்கல்) டிராயிங், மின்சுற்று வரைபடங்கள், பிரின்டட் சர்கியூட் போர்டு (பிசிபி), ஃபர்ம்வேர் எனப்படும், சிப்பில் இயங்கும் மூல நிரல்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையும், பயனாளருக்கு சுதந்திரத்தை வழங்குவதுமே, திறவூற்று வன்பொருள் முறைக்கு அடிப்படை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஹார்டுவேர் வடிவமைப்பில் திறந்த நிலையைக் குறிக்கிறது.  எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமின்றி, சன், நியூரோஸ், பக் லேப்ஸ், போன்ற வணிக நிறுவனங்களும் ஓப்பன் சோர்ஸ் ஹார்டுவேரில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. சில ஓப்பன் சோர்ஸ் பிராஜெக்ட்டுகள் பற்றிப் பார்க்கலாம்:

நியூரோஸ்(Neuros):சிகாகோ நகரைச் சேர்ந்த நியூரோஸ் நிறுவனம், நியூரோஸ் ஓஎஸ்டி, நியூரோஸ் லிங்க் என இரண்டு தயாரிப்புகளை ஓப்பன் சோர்ஸ் முறைக்கு மாற்றியுள்ளது. (ஓஎஸ்டி என்பது டிஜிட்டல் ரெக்கார்டர். நியூரோஸ் லிங்க் என்பது தொலைக்காட்சியையும், இணையத்தையும் இணைக்கும் கருவி).


ஓப்பன்ஸ்பார்க்(OpenSPARC): சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம், தன்னுடைய அல்ட்ராஸ்பார்க் டி1 மைக்ரோபிராசஸரை (ஹிறீtக்ஷீணீஷிறிகிஸிசி ஜி1 விவீநீக்ஷீஷீஜீக்ஷீஷீநீமீssஷீக்ஷீ), ஓப்பன் சோர்ஸ் முறையின் கீழ் கொண்டுவந்தது. இத்திட்டத்திற்கு ஓப்பன்ஸ்பார்க் டி1 என்று பெயர். இதன் தொடர்ச்சியாக ஓப்பன்ஸ்பார்க் டி2 என்ற 64-பிட் மைக்ரோபிராசஸரை ஓப்பன் சோர்ஸ் செய்துள்ளது. ÔÔஅதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், பிராசஸர் கட்டமைப்பு வளர்ச்சியிலும், அதற்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதேÕÕ ஓப்பன்ஸ்பார்க் திட்டத்தின் நோக்கம் என சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓப்பன்மோக்கோ(OpenMOKO): பொதுப் பயனாளர்களுக்கு சந்தையில் அறிமுகமான முதல் மொபைல்போன் நியோ 1973. இதன் உருவாக்கத்தில், ஓப்பன்மோக்கோ நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. இதன் அடுத்த பதிப்பு, நியோ ஃபிரீ ரன்னர். இது தொடு திரை, வை-ஃபை, ஜிபிஆர்எஸ், புளூடூத் ஆகிய வசதிகளுடன் கூடிய, ஓப்பன்மோக்கோ லினக்ஸில் இயங்கும், டிரை-பேண்ட் ஜிஎஸ்எம் ஃபோன். ஃபிரீ ரன்னரைப் பொறுத்தவரையில் முக்கியமான அம்சம், பயனாளர் தனக்கு வேண்டிய மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம் என்பதே.

No comments:

Post a Comment